புதிய சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

யாழ்ப்பாணத்தில்:-

 1. தேசிய அடையாள அட்டை
 2. மருத்துவச் சான்றிதல் (NTMI இல் பெற்றது)
 3. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மூலப்பிரதி.
 4. விண்ணப்பதாரி திருமணமான பெண்ணாக இருப்பின் அவரது தேசிய அடையாள அட்டையில் உள்ள முதற்பெயர் அவரது கணவரது பெயராக இருப்பின் திருமண அத்தாட்சிப்பத்திரத்தின் மூலப்பிரதி.
 

ஏனைய மாவட்டங்கள்;-

 1. புகைப்படம் 6 – வெள்ளை பின்னணி கொண்ட கறுப்பு வெள்ளைப் புகைப்படம்-அளவு (3.5cm×4.5cm) – (கண்ணாடி அணிபவராக இருந்தாலும் கண்ணாடி அணியாமல் எடுத்த புகைப்படம்).
 2. மருத்துவச் சான்றிதல் (NTMI இல் பெற்றது)
 3. தேசிய அடையாள அட்டை அல்லது செயல் நிலையில் உள்ள கடவுச் சீட்டு பிரதி.
 4. கடவுச் சீட்டு மூலம் விண்ணப்பிப்பதாயின் கிராம சேவகரிடம் இருந்து வதிவிட குணநல சான்றிதழ் பெற வேண்டும்.
 5. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் மூலப்பிரதி.
 6. பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலும் தேசிய அடையாள அட்டையிலும் உள்ள உங்களதும் உங்களது முதற்பெயரிற்கும் இடையில் வித்தியாசம் (எழுத்துப் பிழைகள்) இருப்பின் இரண்டு ஆவணங்களிலும் உள்ள பெயர்கள் உங்களதுதான் என முத்திரை மீது கையொப்பம் இட்டு உறுதிப்படுத்தப்பட்ட சத்தியக் கடதாசி.
 7. விண்ணப்பதாரி திருமணமான பெண்ணாக இருப்பின் அவரது தேசிய அடையாள அட்டையில் உள்ள முதற்பெயர் அவரது கணவரது பெயராக இருப்பின் திருமண அத்தாட்சிப்பத்திரத்தின் மூலப்பிரதி.