பொதுத்தேவைகள்

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளல்.

புதிய ஸ்மார்ட் கார்ட் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான அறிவுறுத்தல்கள்.
இவ் சாரதி அனுமதிப்பத்திரமானது பின்வரும் இரு முறைகளுள் வழங்கப்படுகிறது.

 1. முதலாவது முறை வீரகேர மற்றும் குருணாகல மாவட்ட அலுவலகம் போன்ற தலைமை அலுவலகங்களில் அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதற்கான கணனி வழி நேரடி இணைய இணைப்பு முறை.
 2. இரண்டாவது முறை – ஏனைய மாவட்ட அலுவலகங்களிலான இணையமல்லாத முறை

 

பொது தேவைப்பாடுகள்

 

 1. விண்ணப்பதாரி நேரடியாக சமூகமளிக்க வேண்டும்.
 2. தேசிய அடையாள அட்டையையோ அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தினைக் கொண்ட செல்லுபடியாகும் கடவுச்சீட்டையோ கொண்டு வர வேண்டும்.
 3. இணைய வழி நேரடி இணைப்பு கிடைக்கக்கூடிய அலுவலகங்களில் இருந்து இச் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு புகைப்படங்களை கொடுக்க வேண்டிய தேவைப்பாடு இல்லாது இருப்பதுடன் கணனி செயன்முறையின்பொழுது உரிய புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இணைய இணைப்பு அற்ற முறை பயன்படுத்தப்படும் அலுவலகங்களில் இள நிற பின்புலத்துடன் கூடிய இரண்டு கடவுச்சீட்டு அளவு கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் தேவைப்படுகிறது.
 4. முதற் தடவையாக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுகையில் மூல பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் கொடுக்கப்பட வேண்டும்.

பாரமற்ற வாகனங்களுக்கான புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளல்.

 

 1. 17 வயது பூர்த்தியடைந்த ஒருவரே பதிவு செய்து கொள்ளவும் எழுத்து பரீட்சைக்கு அமரக்கூடியவராகவும் உள்ளார்.
 2. எழுத்துப் பரீட்சையில் சித்தியடையும் பட்சத்தில் உயர்ந்தபட்ச 18 மாதங்களுக்கு என ஒரு பழகுபவர்களின் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகிறது.
 3. இவ் அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பவர் வாகனம் செலுத்திப் பழகலாம்.
 4. செய்முறை பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஒருவர் 18 வயதை பூர்த்தி செய்திருப்பதுடன், பழகுபவர் அனுமதிப்பத்திரம் பெற்று குறைந்தது 3 மாதங்கள் கடந்திருக்கவும் வேண்டும்.
 5. செய்முறைப் பரீட்சையை எதிர்கொண்டு அதில் சித்தியடைவது கட்டாயமானது.
 6. இலங்கையின் மருத்துவ சங்கத்தின் பதிவு செய்த ஒரு மருத்துவரிடமிருந்து 6 மாதத்திற்கு மேற்படாத காலத்திற்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண்ணறிவு சான்றிதழ் பத்திரம் M.T.A. 31A.

பார வாகனங்களுக்காக சாரதி அனுமதிப்பத்திரத்தை விஸ்தரித்தல்.

 

 1. விண்ணப்ப திகதிக்கு 02 வருடங்களுக்கு முன்பதாகவே குறைந்த பட்சம் சாதாரண பாரமற்ற வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். (வாகன வகுப்பு B மற்றும் B1 மட்டும்).
 2. பாரமற்ற மோட்டார் பஸ் மற்றும் மோட்டார் லொறி வாகன வகைப்பாடுகளுக்காக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஆகக் குறைந்தது 4 அடி 10 அங்குலம் உயரமானவராக இருக்க வேண்டும். மோட்டார் பஸ் மற்றும் மோட்டார் லொறி வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு 5 அடி உயரம் தேவையாக உள்ளது
 3. 20 வயது பூர்த்தியடைகையில் பதிவு செய்து எழுத்துப் பரீட்சையை எதிர்கொள்ளக்கூடியதாக உள்ளது. .
 4. எழுத்துப் பரீட்சையில் சித்தியடையும் பட்சத்தில் உயர்ந்த பட்சம் 18 மாதங்கள் வரைக்கும் ஒரு பழகுபவர் அனுமதிப்பத்திரம் கொடுக்கப்படும்.
 5. அவ் அனுமதியைக் கொண்டிருப்பவர் வாகனம் செலுத்திப் பயிற்சி செய்யலாம்.
 6. செய்முறைப் பரீட்சையை எதிர்கொள்வதற்கு 21 வயதைப் பூர்த்தி செய்திருப்பதுடன், பழகுபவர் அனுமதிப்பத்திரம் பெற்று ஆகக் குறைந்தது 3 மாதம் கடந்திருக்க வேண்டும்.
 7. விண்ணப்பதாரியானவர் செய்முறைப் பரீட்சையை எதிர்கொண்டு அதில் சித்தியடைவது கட்டாயமானதாகும்.
 8. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திடமிருந்து 06 மாதத்திற்கு மேற்படாத காலப்பகுதிக்குள் நுண்ணறிவு மருத்துவ சான்றிதழைப் பெற்றுக்கொளள் வேண்டும்.

வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளல்

 

 1. இதன் கீழ் இலகு ரக வாகன வகுப்புக்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும்.
 2. ஆகக் குறைந்தது அடுத்துவரும் 06 மாதங்களுக்கேனும் செல்லுபடியானதாக உள்ள வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம்.
 3. விண்ணப்பதாரர் வெளிநாட்டவராயின் ஆகக் குறைந்தது ஒரு மாதகாலப் பகுதிக்கான வீசா அனுமதிப் பத்திரம்.
 4. சாரதி அனுமதிப் பத்திரமும், வெளிநாட்டு கடவுச் சீட்டும் ஆங்கில மொழியில் இல்லாத பட்சத்தில் பதிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு.
 5. இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர் ஒருவரிடமிருந்து எம்.ரீ.ஐ. 31 ஆம் இலக்க மாதிரிப் படிவத்தில் 06 மாதங்களுக்குள் பெற்றுக் கொள்ளப்பட்ட தகுதிகாண் மருத்துவ சான்றிதழ்.
 6. வெளிநாட்டு தூதுவர் சேவைக்கு உரித்தான ஒருவராயின் அதனை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்படுகின்ற கடிதம்.
 7. இலங்கையர் அல்லது இருவழிப் பிரசையாயின் தேசிய அடையாள அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட செல்லுபடியான கடவுச் சீட்டை சமர்ப்பித்தல் வேண்டும்.